மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.;
Image Courtesy: @IrishWomensCric
டப்ளின்,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அயர்லாந்து கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக பாகிஸ்தான் வரிந்து கட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
அயர்லாந்து அணி விவரம்:
கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, லாரா டெலானி, ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்
மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், எய்மான் பாத்திமா, குல் பெரோசா, முனீபா அலி, நஜிஹா அல்வி (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சுந்து, நடாலியா பர்வைஸ், ரமீன் ஷமிம், சாடியா இக்பால், சித்ரா அமீன், ஷவால் சுல்பிகார் மற்றும் துபா ஹஸ்ஸார்.