மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.;

Update:2025-06-24 13:31 IST

Image Courtesy: @ICC

பார்படாஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மியான் ஸ்மிட் 59 ரன் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கரிஷ்மா ராம்ஹராக், அபி பிளெட்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 65 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்