மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியில் சிறந்த பீல்டர் வீராங்கனை விருதை வென்றது யார்..?

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-11-04 17:29 IST

image curtesy:twitter/@BCCIWomen

மும்பை,

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் சிறந்த பீல்டர் விருதை அமன்ஜோத் கவுர் வென்றுள்ளார். இந்த இறுதிப்போட்டியில் சதமடித்து இந்திய அணியை அச்சுறுத்தி வந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட்டின் கேட்சை அவர் அற்புதமாக பிடித்தார்.

இதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை ஜெமிமா ரோட்ரிக்ஸ் வழங்கி கவுரவித்தார். 

 

Tags:    

மேலும் செய்திகள்