மகளிர் உலகக்கோப்பை: அரையிறுதி சுற்று முழு விவரம்

இந்த தொடரின் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது.;

Update:2025-10-27 13:04 IST

மும்பை,

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

இதனையடுத்து அரையிறுதி சுற்று 29-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 29-ந்தேதி கவுகாத்தியில் நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 30-ந்தேதி நவிமும்பையில் நடக்கும் 2-வது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் 1 மற்றும் 4-வது இடங்களை பிடித்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோதும். 

Tags:    

மேலும் செய்திகள்