மகளிர் உலகக்கோப்பை: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நேற்று தொடங்கியது.;

Update:2025-10-01 07:19 IST

Image Courtesy: @BCCIWomen

கவுகாத்தி,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நேற்று தொடங்கியது. இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 269 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அமன்ஞோத் கவுர் 57 ரன் எடுத்தார்.

தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு இழந்து 211 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 59 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்