இளையோர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம்

இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-07-31 14:57 IST

மும்பை,

இந்திய யு-19 (19-வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 21-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், பின்னர் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா, வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் படேல், டி.தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலான் படேல், உத்தவ் மோகன், அமன் சவுகான்.

Tags:    

மேலும் செய்திகள்