இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி மாபெரும் சாதனை

இந்த சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் 5-வது இடத்தில் உள்ளார்.;

Update:2025-09-25 07:47 IST

பிரிஸ்பேன்,

இந்திய இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 49.4 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அபிக்யன் குண்டு 71 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 70 ரன்னும் விஹான் மல்ஹோத்ரா 70 ரன்னும் விளாசினார்.

இந்த ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி இதுவரை 41 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. வைபவ் சூர்யவன்ஷி - 41 சிக்சர்கள்

2. உன்முகுந்த் சந்த் - 38 சிக்சர்

3. ஜவாத் அப்ரார் - 35 சிக்சர்

4. ஷாசைப் கான் - 31 சிக்சர்

5. ஜெய்ஸ்வால்/தவ்ஹித் ஹ்ரிடோய் - 30 சிக்சர்

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 249 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 51 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்