கோவா எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளராக மார்கஸ் நியமனம்

ஹாங்காங்குக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டது.;

Update:2025-07-19 13:43 IST

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் ஹாங்காங்குக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் இந்தியா தகுதி பெறுவது சிக்கலானது.

இதனையடுத்து எழுந்த கடும் விமர்சனத்தை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மனோலோ மார்கஸ் (ஸ்பெயின்) பதவி விலகினார். இந்த நிலையில் அவர் எப்.சி. கோவா அணிக்கு தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்