நேஷன்ஸ் லீக் கால்பந்து: போர்ச்சுகல் அணி சாம்பியன்
, ஸ்பெயின் அணி , , Portugal;
பெர்லின்,
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வந்தது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.