ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சோலோ,
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 17 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதன் 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஹாங்காங்கை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 110-100 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. ஹாங்காங் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடம் பெற்று கால்லிதியை எட்டியது. அடுத்து இந்திய அணி காலிறுதியில் 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடித்த ஜப்பானுடன் மோதுகிறது.