சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சாத்விக்- சிராஜ் ஜோடி

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்தது.;

Update:2025-09-22 01:15 IST

image courtesy:PTI 

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி, ‘நம்பர் ஒன்’ இணையான தென் கொரியாவின் கிம் வோன் ஹோ -சியோ செயுங் ஜா இணையை எதிர்கொண்டது.

முதல் செட்டில் 14-7 என்று வலுவான முன்னிலை பெற்ற இந்திய ஜோடி அதை முழுமையாக வசப்படுத்த தவறியது. சரிவில் இருந்து மீண்டெழுந்த தென்கொரிய கூட்டணி மளமளவென புள்ளிகளை திரட்டி முதலாவது செட்டை போராடி வென்றதுடன், 2-வது செட்டில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் சாத்விக்- சிராக் ஜோடி 19-21, 15-21 என்ற நேர் செட்டில் 45 நிமிடங்களில் தோல்வியை தழுவியது.

Tags:    

மேலும் செய்திகள்