சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: பிரனாய் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய முன்னணி வீரரான பிரனாய், ஜப்பானின் கோகி வடனபே உடன் மோதினார்.;

Update:2025-09-16 19:57 IST

கோப்புப்படம்

ஷென்சென்,

மொத்தம் ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான பிரனாய், ஜப்பானின் கோகி வடனபே உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 8-21 என்ற புள்ளிக்கணக்கில் பிரனாய் இழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரனாய் 21-16, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் கோகி வடனபேவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்