சீன ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.;

Update:2025-07-22 16:28 IST

பீஜிங்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-14 என லக்சயா சென் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சீன வீரர் அடுத்த இரு செட்களை 24-22, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால் இந்தியாவின் லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்