இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்‌சயா சென் தோல்வி

நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌சயா சென், சீன தைபேயின் லின் சுன் யியை எதிர்கொண்டார்.;

Update:2026-01-17 04:07 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 14-வது இடம் வகிப்பவருமான இந்திய வீரர் லக்‌சயா சென், 12-ம் நிலை வீரரான சீன தைபேயின் லின் சுன் யியை எதிர்கொண்டார்.

68 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்‌சயா சென் 21-17, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்