இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் திரிஷா ஜாலி - காயத்ரி இணை வெற்றி
இந்தியாவின் திரிஷா ஜோலி - காயத்ரி இணை, தாய்லாந்து ஜோடியுடன் மோதியது.;
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி இணை, தாய்லாந்து ஜோடியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாகி விளையாடிய திரிஷா ஜாலி - காயத்ரி இணை 21-15,21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.