இந்திய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.;
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாமின் நுயென் துய் லின்னுடன் தனது முதல் சுற்றில் மோதுகிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, அமெரிக்காவின் சென் ஜி யி-பிரெஸ்லி சுமித் ஜோடியுடன் முதல் சுற்றில் மோதுகிறது.