சர்வதேச செஸ்: இந்திய வீரர் குகேஷ் வெற்றி
13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 8-வது சுற்று போட்டிகள் நடந்தன;
விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 8-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஒரு ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 41-வது நகர்த்தலில் விளாடிமிர் பெடோசீவை (சுலோவேனியா) தோற்கடித்தார்.
8 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 5½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜவோகிர் சிந்தாராவ் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி) 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.