தேசிய சீனியர் தடகளம்: சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய தமிழக வீராங்கனை
இதில் மற்றொரு தமிழக வீராங்கனையான அஸ்வினி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.;
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சியில் 28வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா, 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் குஜராத்தின் சரிதாபென் கெய்க்வாட் 57.21 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள வித்யா புதிய சாதனை படைத்துள்ளார்.
கேரளாவின் அனு (58.26 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 02.41 வினாடி) வெண்கல பதக்கமும் கைப்பற்றினர்.