உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா

சீன அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.;

Update:2025-06-14 21:35 IST

முனிச்,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

19 வயதான சுருச்சி ஏற்கனவே பியூனஸ் அய்ரஸ் மற்றும் லிமாவில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில், இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் பாபுட்டா-ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். அவர்கள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சீனாவை சேர்ந்த ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்