சிங்கப்பூர் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது
இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.;
சிங்கப்பூர்,
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் டென்மார்க்கின் ராஸ்முஸ் ஜெம்கியுடன் மோதுகிறார். லக்ஷயா சென், லின் சுன் யியையும் (சீன தைபே), பிரியான்ஷூ ரஜாவத், கோடை நரகாவையும் (ஜப்பான்), கிரண் ஜார்ஜ், வெங் ஹாங் யங்கையும் (சீனா) சந்திக்கின்றனர்.பெண்கள் ஒற்றையரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் மோதலை கனடாவின் வென் யு ஜாங்குடன் தொடங்குகிறார்.