உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
பி.வி.சிந்து அடுத்து மலேசியாவின் லெட்ஷனாவை எதிர்கொள்கிறார்.;
பாரீஸ்,
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 15-வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, 69-ம் நிலை வீராங்கனை கலோயனா நல்பந்தோவாவை (பல்கேரியா) சந்தித்தார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 23-21, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பி.வி.சிந்து அடுத்து மலேசியாவின் லெட்ஷனாவை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் ஜோவாகிம் ஓல்டோர்ப்பை (பின்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.