இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.;
வாஷிங்டன்,
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 6-7 (5-7), 6-7 (4-7) என ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் தொடரில் இருந்து ஸ்வரேவ் வெளியேறினார்.