மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ரைபகினா 3-வது சுற்றில் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.;
image courtesy:twitter/@MutuaMadridOpen
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) உடன் மோதினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைபகினா 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.