மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா-எலினா ஸ்விடோலினா மோதினர்.;
image courtesy: MutuaMadridOpen twitter
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதுகிறார்.