லாஸ் ஏஞ்சல்சுக்கு நிவாரண நிதி வழங்கிய டென்னிஸ் வீரர்

காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.;

Update:2025-01-16 19:11 IST

கோப்புப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று, மேலும் அதிகமாகும் என்று முன்னெச்சரிக்கையால், நகரின் பல பகுதிகளும் அதி தீவிர அச்சத்தை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீக்கு 23 ஆயிரத்திற்க்கும் அதிகமான பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. இதில் 18 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இரண்டு காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெளியேற்ற உத்தரவால் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியே தங்கி உள்ளனர். இரவில் ஊரடங்கு உத்தரவும் அங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிகளுக்காக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற ரூ.71 லட்சம் பணத்தை வழங்க உள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் அறிவித்துள்ளார்.

மேலும் தன்னை வளர்த்த ஊருக்கு தன்னால் இயன்றதை செய்வதாகவும், மக்களுக்கு உதவ பலர் முன் வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்