விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சி... நீங்கள் எங்களை பார்த்தது கூட இல்லை - சட்டசபையில் நகைச்சுவையான விவாதம்

தமிழக சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என கூறினார்.;

Update:2025-03-20 11:00 IST

சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, பொள்ளாச்சி தொகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 174 கோடி ரூபாய் மதிப்பில் 22 ஆயிரம் வீடுகளை இணைக்கும் வகையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் தற்போது 7 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரம் வீடுகளையும் இத்திட்டத்தில் இணைத்து விஷக்கிருமி இல்லாத பொள்ளாச்சியாக உருவாக்க வேண்டும் என அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொள்ளாச்சி ஜெயராமன் தனக்கு வாய்ப்பு வழங்கிய பேரவை தலைவருக்கு நன்றி சொன்னார். ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பேசி வாய்ப்பு கேட்ட போதிலும் துணை சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் எங்களை பார்த்தது கூட இல்லை என நகைச்சுவையாக பேசினார். இதன்பின்னர், உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்கப்படாத 15 ஆயிரம் குடும்பங்களையும் அத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்