'அ.தி.மு.க.விற்கு அழிவு என்பதே கிடையாது' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி


அ.தி.மு.க.விற்கு அழிவு என்பதே கிடையாது - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
x

அண்ணாமலை அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. காணாமல் போகும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அ.தி.மு.க.விற்கு அழிவு என்பதே கிடையாது. சுமார் 50 வருடங்களுக்கும் மேல் இயங்கி வரும் கட்சி இது. அ.தி.மு.க. என்பது ஆயிரம் காலத்துப் பயிர். இது எல்லோருக்கும் நிழல் தரும் மரம். நேற்று வந்த அண்ணாமலை அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் அ.தி.மு.க. அழிந்துவிடும் என்று பேசுகிறார். பா.ஜ.க. முதலில் தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்பதை அவர் பார்க்க வேண்டும்."

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.



Next Story