நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்


நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்
x
தினத்தந்தி 14 May 2019 3:52 PM GMT (Updated: 14 May 2019 3:52 PM GMT)

நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.   இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், குட்டி பத்மினி, லலிதா உள்ளிட்ட 24 பேரும் பங்கேற்றனர்.

இதன்பின் இக்கூட்டத்தில், நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.  இதற்காக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனை அடுத்து தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துவதற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.

Next Story