சினிமா செய்திகள்

“நான் பெண்களை மதிப்பவன்” -இயக்குனர் பாக்யராஜ் + "||" + I respect women Director Bhagyaraj

“நான் பெண்களை மதிப்பவன்” -இயக்குனர் பாக்யராஜ்

“நான் பெண்களை மதிப்பவன்” -இயக்குனர் பாக்யராஜ்
சந்தோஷ்-சாந்தினி ஜோடியாக நடித்துள்ள படம் நான் அவளை சந்தித்தபோது. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கி உள்ளார். படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாக்யராஜ் பேசியதாவது.
“பெண்கள் பற்றி நான் பேசிய கருத்து சர்ச்சையானதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. காரணம் பெண்கள் மனதில் இடம்பிடித்துதான் உயர்ந்த இடத்துக்கு வந்தேன். எம்.ஜி.ஆர் எனது படங்களை உன்னிப்பாக கவனித்த பிறகே அவரது கலைவாரிசாக அறிவித்தார்.


என்னையும் தாண்டி பாக்யராஜ் பெண்கள் மனதில் இடம்பிடித்து இருக்கிறார் என்று நெருக்கமானவர்களிடம் அவர் சொல்லி இருக்கிறார். பெண்கள் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது எனது மனசாட்சிக்கு தெரியும். எனவே மற்றவர்கள் சொல்வது பற்றி கவலைப்பட தேவை இல்லை. பெண்கள் இன்றும் என் மீது பற்றுதலோடு இருக்கிறார்கள். அவர்களை நான் மதிக்கிறேன்.

ஏதோ ஒரு காரணத்தை வைத்து தவறாக பேசியதாக என்னை வரச்சொல்லி உள்ளனர். எனக்கு சம்மன் அனுப்பியவர்களே இவரைப் போய் அழைக்க வேண்டி இருக்கிறதே என்று யோசித்து இருப்பார்கள். எனவே இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நான் அவளை சந்தித்தபோது’ படம் சிறப்பாக வந்துள்ளதாக அறிந்தேன். படம் வெற்றி பெறும்” இவ்வாறு பேசினார்.

விழாவில் இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், வி.டி.ரித்திஷ் குமார், அலவை பாலா ஆகியோரும் பேசினார்கள்.