சமையல் அறையை சுத்தம் செய்தாலே அதுவே நல்ல உடற்பயிற்சி - அஞ்சலி
சமையல் அறையை சுத்தம் செய்தாலே அதுவே நல்ல உடற்பயிற்சி தான் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
சென்னை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35000-ஐ கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இது வரை 2323 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை அஞ்சலி தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “ஜிம்முக்கு போகமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டில் இருக்கும் கிச்சனை சுத்தம் செய்தாலே அது நல்ல உடற்பயிற்சி” எனக் குறிப்பிட்டு, தனது கிச்சனை சுத்தப்படுத்துகிறார்.
Related Tags :
Next Story