அப்பா என்னை ஒரு போதும் தண்டிக்கவில்லை - சுருதிஹாசன்

அப்பா என்னை ஒரு போதும் தண்டனையும் தந்ததில்லை, தண்டிக்கவில்லை என சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, வெள்ளித்திரை - சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். தங்களுடைய சமூக வலைதளங்களில் மட்டும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது முதலே சுருதிஹாசன் மும்பையில் இருக்கிறார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த சுருதிஹாசன்,
தந்தையிடம் பெற்ற மோசமான தண்டனை எது என ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.
அப்பா என்னிடம் கத்தியதில்லை, தண்டனையும் அளித்ததில்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. எப்போதும் காரணம், தர்க்கத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை நான் தவறு செய்தேன்.
அதற்கு, நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என்றார் அப்பா. அவர் தற்போது சென்னையில் நலமாக உள்ளார். பாதுகாப்புக்காக தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் லாக் டவுன் முடிந்த பிறகு நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் படப்பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவதை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story