சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசை ‘ஓடிடி’ + "||" + The music of Ilayaraja is OTT

இளையராஜாவின் இசை ‘ஓடிடி’

இளையராஜாவின் இசை ‘ஓடிடி’
இசையமைப்பாளர் இளையராஜா இசை ‘ஓடிடி’ என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது.
“உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் கொரோனா காலகட்டம் தடுக்கிறது. ஆனாலும் உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எந்த நிமிடம் ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி என்னுடைய இசை உங்களுடனே தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது.


இசை வடிவில் மட்டும் வந்தால் போதுமா? நான் நேரில் வரவேண்டாமா? உங்களிடத்திற்கு உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன் இசை ஓடிடி மூலமாக இசை ஓடிடி என்பதை புதிதாக தொடங்க இருக்கிறேன். இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்ற அரிய விஷயங்களையும் ஒவ்வொரு பாடலின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் அதில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதையும் அதை பதிவு செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தோம் என்பதையும் நாங்கள் சொல்ல இருக்கிறோம். எங்கும் கேட்க முடியாத தகவல்களை தாங்கி வருகிறது இந்த இசை ஓடிடி.

மேலும் உலக மாபெரும் இசை மேதைகள் தங்கள் தங்களுடைய அனுபவங்களின் மூலமாக உணர்ந்ததையும் என்னைப்பற்றிய அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைகலைஞர்களும் இதன்மூலம் சுவராஸ்யமான தகவல்களை உங்களுக்கு அளிக்க இருக்கிறார்கள். இவை உங்கள் வீடு தேடி விரைவில் வர இருக்கிறது.” இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.