சினிமா செய்திகள்

“தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி” சூரி சொல்கிறார் + "||" + "Satisfaction comes from watching a movie in the theater," says Suri

“தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி” சூரி சொல்கிறார்

“தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி” சூரி சொல்கிறார்
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்கு போய் விட்டார்கள்.


கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்கு போய் விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானவர்கள், ருசியாக சமைப்பது எப்படி? என்று புத்தகம் படித்து சமைக்க கற்றுக் கொண்டார்கள்.


நகைச்சுவை நடிகர் சூரி மதுரை அருகில் உள்ள சொந்த கிராமத்துக்கு போய்விட்டார். அவரிடம், ஓடிடி தளத்தில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது பற்றி கேட்டபோது, “அறிவியலில் வளர்ச்சியை குறை சொல்லக்கூடாது. அதை யாராலும் தடுக்க முடியாது. இருப்பினும், வீட்டுக்குள் உட்கார்ந்து படம் பார்ப்பது திருப்தியாக இல்லை. தியேட்டருக்கு போய் விசில் அடித்து, ஆரவாரம் செய்து கொண்டு படம் பார்த்தால்தான் திருப்தியாக இருக்கும்” என்றார், சூரி.