சினிமா செய்திகள்

வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம்கமல்ஹாசன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? + "||" + Keerthi Suresh opposite Kamal Haasan in Part 2?

வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம்கமல்ஹாசன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம்கமல்ஹாசன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?
வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம்கமல்ஹாசன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன்2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


இந்த படத்தை முடித்த பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அதோடு வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்துக்கான வேலைகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையாடு விளையாடு2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அனுஷ்கா பெயர் அடிபட்டது. தற்போது கீர்த்தி சுரேஷ் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.