‘குறள் 388’ அரசியல்வாதிகளையும், அப்பாவி மக்களையும் பற்றிய படம்

அரசியல்வாதிகளையும், அப்பாவி மக்களையும் பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், ‘குறள் 388’.
இதில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதுவரை கவர்ச்சியாக நடிக்காத சுரபி, இந்த படத்தில் முதல்முறையாக கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார். இவர் களுடன் நாசர், முனீஷ்காந்த், ராமதாஸ், ஜெயப்பிரகாஷ், பஞ்சு சுப்பு, ‘தலைவாசல்’ விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜி.எஸ்.கார்த்திக் டைரக்டராக அறிமுகமாகிறார். இரா.ரவிசங்கர் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
ஜான் சுதீர், கிரண் தனமாலா ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படம் அமெரிக்கா, தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.
Related Tags :
Next Story