நீல வண்ண லிப்ஸ்டிக் போட்ட பிரபல நடிகை; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்


நீல வண்ண லிப்ஸ்டிக் போட்ட பிரபல நடிகை; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்
x

Image courtesy:  Indiatoday    

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி கலாய்த்து தள்ளியுள்ளனர்.


மும்பை,


தொலைக்காட்சி நடிகை, பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் மாடல் அழகி என பன்முக தன்மையுடன் இருக்கும் இளம் நடிகை ஊர்வி ஜாவித். ரசிகர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் கவனம் தன் பக்கம் திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நன்கு அறிந்தவர்.

ஆடை அணிவது ஆகட்டும், ஒப்பனை செய்து கொள்வதில் ஆகட்டும், வீட்டை விட்டு அவர் வெளியே வருகிறார் என்றால் ஒவ்வொருவரும் தன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்படுபவர்.

இந்த முறை அப்படி என்ன செய்து விட்டார். எப்போதும் முக அழகின் ஒரு பகுதியாக உதட்டில் வண்ண சாயம் பூசுவது பெண்களின் வழக்கம். அவற்றில், இளஞ்சிவப்பு, பிங்க் போன்ற உதட்டின் இயற்கை வண்ணத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவார்கள்.

இந்த நிலையில், நடிகை ஊர்வி ஜாவித் வெண்மை நிற ஆடையுடன், நீல வண்ண லிப்ஸ்டிக் மற்றும் நகப்பூச்சுகளை போட்டு புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

ஒருவர், நடிகை மையை (இன்ங்) குடித்து விட்டாரா? என்று கேட்டுள்ளார். இவரை போலவே பலரும் இதே கேள்வியை முன்வைத்து உள்ளனர். மற்றொருவர், மேடம் உதட்டில் இன்க் பூசியிருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.


Next Story