ரஜினியின் வேட்டையன் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

வேட்டையன் படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Vettaiyan ️
— Lyca Productions (@LycaProductions) August 18, 2024
Tomorrow 10 AM #வேட்டையன் ️ pic.twitter.com/kopEJrmY76
Related Tags :
Next Story