துணிவை முந்திய வாரிசு திரைப்படம் ..! உலக அளவில் வசூலில் ஆதிக்கம்


துணிவை முந்திய வாரிசு திரைப்படம் ..! உலக அளவில் வசூலில் ஆதிக்கம்
x

துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர். துணிவு படத்துக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் வாரிசு படத்துக்கு இசையமைத்துள்ள தமனும் விஜய் உடன் பணியாற்றியுள்ளது இதுவே முதன்முறை

இந்த திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் ரூ. 80 கோடியும் , துணிவு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் ரூ.65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொங்கல் விடுமுறை இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

வாரிசு இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.


Next Story