'வாரிசு' படத்தின் பாடலில் விஜய் நடனமாடும் வீடியோ லீக் - அதிர்ச்சியில் படக்குழு


வாரிசு படத்தின் பாடலில் விஜய் நடனமாடும் வீடியோ லீக் - அதிர்ச்சியில் படக்குழு
x

வீடியோ காட்சி லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் விஜய்யும், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் காதல் காட்சியில் பங்கேற்று நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.26 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story