உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்.. கீர்த்தி சுரேஷ் பட அப்டேட்

இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரகு தாத்தா'. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், அந்த பதிவில், " ரகுதாத்தா படப்பிடிப்பு நிறைவுற்றது. உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.