வெளியானது கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டிரைலர்...! - ரசிகர்கள் கொண்டாட்டம்


வெளியானது கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டிரைலர்...! - ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 27 March 2022 7:54 PM IST (Updated: 27 March 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

சென்னை,

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் கே.ஜி.எப் 2 படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சரியாக 6.40 மணிக்கு படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 “I don’t like violence. I avoid it. But Violence likes me. SO I can’t avoid” யாஸ் பேசிய என்ற ஆங்கில வசனம் ரசிகர்களுக்கிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story