அரசு பெண் ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி புதிய தமிழகம் கட்சி பிரமுகருக்கு வலைவீச்சு
திருத்தங்கல் அருகிலுள்ள கங்காகுளத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுத்தர புதிய தமிழகம் கட்சி பிரமுகரான கங்காகுளத்தை சேர்ந்த
திருத்தங்கல்,
திருத்தங்கல் அருகிலுள்ள கங்காகுளத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுத்தர புதிய தமிழகம் கட்சி பிரமுகரான கங்காகுளத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடமாறுதல் பெற்றுத்தராமல் தம்மை மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திரும்பக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திருத்தங்கல் போலீசில் ஜோதிலட்சுமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் கார்த்திக்ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Next Story