போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(வயது21). இவர் கடந்த 17–ந் தேதி இளம்பிள்ளை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாகனச்சோதனை நடத்திய மகுடஞ்சாவடி போலீசார், மோட்டார் சைக்கிளை நிறுத்தக்கோரி சரவணக்குமாரை தாக்கியதாகவும்
சேலம்,
இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(வயது21). இவர் கடந்த 17–ந் தேதி இளம்பிள்ளை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாகனச்சோதனை நடத்திய மகுடஞ்சாவடி போலீசார், மோட்டார் சைக்கிளை நிறுத்தக்கோரி சரவணக்குமாரை தாக்கியதாகவும் அதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தபோது லாரி மோதி உயிரிழந்ததாகவும் கூறி சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசாரை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம் கலெக்டர் அலுவலக கட்டிடம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, சேதுமாதவன், குழந்தைவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, உயிரிழந்த வாலிபர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.