உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு

ஒரத்தநாட்டில் காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் உண்ணாவிரதம் சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி போனதால்
ஒரத்தநாடு,
ஒரத்தநாட்டில் காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் உண்ணாவிரதம்சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி போனதால் டெல்டா பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து மத்திய–மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகில் டெல்டா பகுதி விவசாயிகளின் போராட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் தலைமையில் நேற்று காலை விவசாயிகள் திடீரென தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட்–லெனிஸ்ட் இளைஞர்படை மாநில அமைப்பாளர் அருண்சோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வக்கீல் ராசலிங்கம், ம.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் அப்புறப்படுத்தினர்இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், ஒரத்தநாடு தாசில்தார் தமிழ்ஜெயந்தி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்றும், எனவே போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினர். இதனை விவசாயிகள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த துணி பந்தல், ஒலிபெருக்கி மற்றும் விளம்பர போர்டு ஆகியவற்றை அதிரடியாக அகற்றினர். மேலும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த ம.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சுப்பையன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி சதாசிவம் உள்ளிட்ட 10 பேர்களை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி வேனில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறுமுனையில் உண்ணாவிரத பந்தல் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விவசாயிகள் சிலர் அருகிலுள்ள பெரியார் படிப்பகத்திற்குள் சென்று அங்கிருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.