புதுவையில் அடிக்கடி சாலைகளில் குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும் சிவா எம்.எல்.ஏ. வேண்டுகோள்


புதுவையில் அடிக்கடி சாலைகளில் குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும் சிவா எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 24 Dec 2016 5:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உருளையன்பேட்டை தொகுதி மக்களிடம் கம்பன் கலையரங்கத்தில் கருத்து கேட்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சிவா எம்.எல்.ஏ., ‘சாலைகளில் அடிக்கடி குழி தோண்டுவதை தவிர்க்க வே

புதுச்சேரி

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உருளையன்பேட்டை தொகுதி மக்களிடம் கம்பன் கலையரங்கத்தில் கருத்து கேட்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சிவா எம்.எல்.ஏ., ‘சாலைகளில் அடிக்கடி குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும். சாலை போடுவதற்கு முன்பு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு போன்ற பணிகளை முடிக்கவேண்டும், பாதாள சாக்கடைகளை முறைப்படுத்த வேண்டும், மழைநீர் விரைவாக வழிந்தோடும் விதத்தில் கால்வாய்களை செப்பனிட வேண்டும், ஊசுட்டேரி குடிநீர் திட்டத்தை துரிதப்படுத்தி நகருக்கு குடிநீர் வழங்குவதை அதிகப்படுத்துதல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் புதுச்சேரி நகராட்சி ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெறும்’ என்றார்.

Next Story