கண்ணமங்கலம் அருகே தாசில்தாரின் தபேதாரை தாக்கியவர் போலீசில் சரண் தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு


கண்ணமங்கலம் அருகே தாசில்தாரின் தபேதாரை தாக்கியவர் போலீசில் சரண் தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2016 1:45 AM IST (Updated: 24 Dec 2016 7:37 PM IST)
t-max-icont-min-icon

தாசில்தாரின் தபேதாரை தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டவர் போலீசில் சரண் அடைந்தார். மணல் கடத்தலை தடுக்க ரோந்து கண்ணமங்கலம் பகுதியில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆரணி தாசில்தார் தமிழ்மணி, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம் ஆகியோர்

கண்ணமங்கலம்,

தாசில்தாரின் தபேதாரை தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டவர் போலீசில் சரண் அடைந்தார்.

மணல் கடத்தலை தடுக்க ரோந்து

கண்ணமங்கலம் பகுதியில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆரணி தாசில்தார் தமிழ்மணி, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம் ஆகியோர் கடந்த 22–ந் தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டரை அவர்கள் மடக்கி சோதனையிட்டனர். அந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும், அதனை ஓட்டி வந்தவர் மேல்நகரை சேர்ந்த பாலாஜி (வயது 32) என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே பாலாஜி தப்பி ஓடினார்.

அந்த டிராக்டர் மேல்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவரவ ரமேஷை சம்பவ இடத்துக்கு வரும்படி அதிகாரிகள் கூறினர். அதன்பேரில் அங்கு வந்த ரமேஷ், மணலுடன் டிராக்டரை கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வருதாக அதிகாரிகளிடம் கூறினார். இதனை நம்பி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆனால் ரமேஷ், மணலை சாலையோரம் கொட்டி விட்டு டிராக்டரை மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல முயன்றார். இதைக்கண்ட தாசில்தார் தமிழ்மணியின் தபேதார் அர்ஜூனன் (55) டிராக்டரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் டிராக்டரில் கிடந்த சிறிய ரம்பத்தால் தபேதார் அர்ஜூனனின் முகம் மற்றும் கையில் வெட்டிவிட்டு டிராக்டருடன் அங்கிருந்து தப்பி சென்றார்.

போலீஸ் நிலையத்தில் சரண்

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வாகனத்தில் டிராக்டரை விரட்டி சென்றனர். ஆனால் டிராக்டருடன் ரமேஷ் தப்பி விட்டார். காயமடைந்த அர்ஜூனன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் தாசில்தார் தமிழ்மணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் (35) நேற்று முன்தினம் இரவு சந்தவாசல் போலீசில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து ரமேஷை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் டிரைவர் பாலாஜியை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story