கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க ஆதார் எண் பதிவேற்றம் செய்ய அலுவலர்களுக்கு பயிற்சி விழுப்புரத்தில் நடந்தது

கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆன்–லைன் மூலம் ஆதார் எண் பதிவேற்றம் செய்வது குறித்து கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வி உதவி தொகை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூ
விழுப்புரம்,
கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆன்–லைன் மூலம் ஆதார் எண் பதிவேற்றம் செய்வது குறித்து கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்வி உதவி தொகைவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அந்த மாணவ, மாணவிகள் அவர்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை ஆன்–லைன் மூலம் வருகிற 31–ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியை கொள்ளும் வகையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அனந்தராம் தலைமை தாங்கி புத்தாக்க பயிற்சி அளித்தார்.
31–ந்தேதிக்குள்...இந்த பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள 34 கல்வி நிறுவனங்களில் இருந்து அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மாணவ– மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அவர்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை ஆன்–லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக பயிற்சி அளித்ததோடு இந்த பணியை 31–ந் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட தகவலியல் அலுவலர்கள் கோபிநாத், வடிவேல், கண்காணிப்பாளர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.