தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைவு தினம் தூத்துக்குடியில் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் தூத்துக்குடி
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்தூத்துக்குடியில் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் முன்பு தொடங்கி, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது. ஊர்வலத்தின் போது, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படம் வாகனத்தில் வைத்து எடுத்து வரப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண் பாசறை துணை செயலாளர் சின்னதுரை, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், உமாமகேசுவரி, கழக அவை தலைவர் தாமஸ் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், முருகன், சிவசுப்பிரமணியன், அய்யாத்துரை பாண்டியன், நகர செயலாளர் விஜயபாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் முருகன், எட்வின் பாண்டியன், ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டிமுன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஈசுவர பாண்டியன், வார்டு செயலாளர்கள் வேலுமணி, பழனிகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரைதென்திருப்பேரை பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு நகர செயலாளர் சிவலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் கந்தன், வக்கீல் அணி செயலாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரியில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, வார்டு செயலாளர்கள் கோபால், சந்திரன், நகர துணை செயலாளர் விசுவநாதன், முன்னாள் கவுன்சிலர் அபுதாகிர், கபீர், சுல்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூர்–குலசேகரன்பட்டினம்குரும்பூரில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு ஒன்றிய அவை தலைவர் பரமசிவம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பஞ்சாயத்து செயலாளர்கள் மதியழகன், கருணாகரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் உத்திரபாண்டி, கிளை செயலாளர்கள் மாடசாமி, முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு பஞ்சாயத்து செயலாளர் சங்கரலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளை செயலாளர்கள் கற்குவேல், ஞானவேல், நாகராஜன், ஆவுடையப்பன், முருகன், ஜெயபால், சின்னசாமி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடிதூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் அழகிரி சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பால்பாண்டி, பொருளாளர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.கணேசன், துணை செயலாளர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் சாயர்புரம் மெயின் பஜாரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சாயர்புரம் நகர அ.தி.மு.க செயலாளர் துரைசாமி ராஜா, நிர்வாகிகள் ரவிகுமார், ஜெகன், கனகராஜ், தனுஷ்கோடி, ஜெயராஜ், தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கயத்தாறு–உடன்குடிகயத்தாறில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சங்கரசுப்பு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படங்களுக்கு ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் கோயில்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆயிஷா கல்லாசி, முன்னாள் மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மூர்த்தி, மாநில பேச்சாளர் பொன் ஸ்ரீராம், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பரமசிவம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விளாத்திகுளம்விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, மார்க்கெட்டில் உள்ள முழு உருவ சிலை ஆகியவற்றுக்கு ஒன்றிய செயலாளர் ரூபம் வேலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் யூனியன் தலைவர் சோலையப்பன், ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் பாபு செல்வகுமார், நகர செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதூரில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் ஞான குருசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் யூனியன் துணை தலைவர் வெம்பூரார், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ஜெயவேல், முன்னாள் நகர செயலாளர் மாரிபாண்டி, ஜெயலலிதா பேரவை வெற்றிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு நகர செயலாளர் முருகானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் ஷேக் தாவூது, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், விவசாய பிரிவு மணி, நகர அவை தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியன், முன்னாள் நகர செயலாளர் ராஜகோபால், கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்– புன்னக்காயல் விலக்கு ரோட்டில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு முடி காணிக்கை செலுத்தியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் அறிவுடை நம்பிபாண்டியன், நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சங்கர், சேர்ந்தபூமங்கலம் பஞ்சாயத்து தலைவர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்ஸ்ரீவைகுண்டத்தில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு நகர செயலாளர் பால்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்தில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு அ.தி.மு.க. பிரமுகர் ஜமீன் சாலமோன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாத்தான்குளம் பழைய பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் யூனியன் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் சவுந்திரபாணடியன், நகர செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். தட்டார்மடம், சாந்திநகர், சவேரியார் நகர், முத்தம்மாள்புரத்திலும் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.