ஈரோட்டில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் தர்ணா


ஈரோட்டில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் தர்ணா
x
தினத்தந்தி 25 Dec 2016 3:30 AM IST (Updated: 25 Dec 2016 1:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட வங்கி ஓய்வுபெற்றோர் சங்கம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி தலைவர் பி.வி.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.கணேஷ், ஏ.ஐ.டியு.சி. மாவட்ட தலைவர்

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வங்கி ஓய்வுபெற்றோர் சங்கம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி தலைவர் பி.வி.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.கணேஷ், ஏ.ஐ.டியு.சி. மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

2002–ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கு 100 சதவீத பஞ்சப்படி வழங்கவேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தவேண்டும். அனைத்து வங்கிகளிலும் ஓய்வு பெற்றோருக்கு என தனியாக ஊழியர் நலன்தொகை ஒதுக்கப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மனோகரன், கனரா வங்கி ஓய்வுபெற்றோர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் தணிகாசலம் மற்றும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story