டீன்ஏஜ் பெண்களை வாட்டும் ‘தேவையற்ற பயம்’

அவர்கள் இருவரும் தோழிகள். ‘டீன்ஏஜ்’ பெண்களுக்கே உரிய நாகரிக உடை அணிந்திருந்தார்கள். 18 வயதில் அடியெடுத்துவைத்து, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘இவர்கள் இருவரில் யாருக்கு பிரச்சினை? என்ன பிரச்சினை?’
இருவரில் வசதிபடைத்த பெண்ணாக காட்சியளித்த கொழுகொழு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் மனநல பிரச்சினை பற்றி, பொறுப்புள்ள தோழியாக அருகில் இருந்த பெண் பேசத் தொடங்கினாள்.
‘‘இவள் என் நெருங்கிய தோழி. வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். இவள் தனது செல்போன் வழியாக இன்டர்நெட் மூலம் எப்போதும் எதையாவது தேடிப் படித்துக் கொண்டிருப்பாள். சில வருடங்களாக அதில் ஆர்வம் அதிகரித்து, இப்போது தேவையற்ற மனப்பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாள்’’ என்றபடி, அந்த தோழியை பற்றிய சில சம்பவங்களை சொன்னாள்.
அதாவது இணையதளத்தில் நோய்களைப் பற்றி விலாவாரியாகத் தேடுவது அவள் வழக்கமாகி இருக்கிறது. அவளுக்கு எப்போதாவது தலை வலிக்குமாம். தலைவலிக்கும்போது தலையின் எந்த பகுதி வலிக்கிறது? எவ்வளவு நேரம் வலிக்கிறது? என்பதை எல்லாம் கவனித்துவிட்டு, இன்டர்நெட்டில் அதற்கான காரணத்தை தேடுவாளாம்.
‘‘பொதுவாக தலைவலி உருவாக 50–க்கும் மேற்பட்ட காரணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், ‘கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் அதிக நேரம் படித்தால் தலைவலி வரலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். ‘லட்சத்தில் ஒரு சிலருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவள் உடனே அதை சீரியசாக எடுத்துக் கொள்வாள். தனக்கு தலைவலி என்றால் மூளையில் கட்டி என்றும், வயிற்று வலி வந்தால் இரைப்பையில் புற்றுநோய் என்றும் பயம் கொள்கிறாள். அதையே நினைத்து தினமும் வருந்துகிறாள்’’ என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள், அந்த தோழி.
பிரச்சினைக்குரிய அந்த கொழுகொழு பெண், என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுவயதில் இருந்து அவள் எவ்வாறு வளர்க்கப்பட்டாள் என்பதை அறிய வேண்டியதிருந்தது. அவள் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தாள். அவளிடம் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பயத்துக்கான மூலத்தை நான் தேடிக்கொண்டிருந்தேன்.
தாயை பற்றி பேசும்போது அவள் கண்கள் கலங்கின. காரணம் கேட்டேன்.
‘‘எனது அம்மா சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் தந்தையை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நான் பிறந்த சில வருடங்களிலே என் தந்தை அகால மரணமடைந்து விட்டார். அதன் பின்பு என் தாயையும், என்னையும், என் தந்தை குடும்பத்தினர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். என் அம்மாவை பெற்ற அம்மா மட்டுமே என் தாய்க்கு ஆதரவாக இருந்திருக்கிறார். என்னை, பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு அம்மா, மையம் ஒன்றிற்கு சென்று சுய தொழில் பயிற்சி பெற்று, தொழில் தொடங்கி ரொம்ப கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறியிருக்கிறார். அப்போது திடீரென்று ஒருநாள், எங்களுக்கு எல்லாமுமாக இருந்த பாட்டியும் இறந்து போனார்’’ என்றவள் தனது தந்தை மற்றும் பாட்டியின் மரணத்தை பற்றி ரொம்ப உருக்கமாக பேசினாள். அவர்களது மரணம் இவளை வெகுவாக பாதித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.
‘அவர்கள் இருவரும் திடீரென்று ஏன் இறந்தார்கள்? அதற்கான காரணம் என்ன?’ என்ற கேள்விகள் அவளுக்குள் முளைத்திருக்கின்றன.
அவளுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சொந்தங்கள் இல்லாததால், அந்த கேள்விகளுக்கு தனது தாயிடம்தான் அவள் விடை தேடியிருக்கவேண்டும். ஆனால் அம்மா, அந்த இரு மரணங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததால், அம்மாவிடம் அந்த கேள்விகளை கேட்க அவள் தயங்கியுள்ளாள்.
சுயமாக தானே அவைகளை பற்றி தெரிந்துகொள்ள என்ன வழி? என்று யோசித்தபோது, இன்டர்நெட் தொடர்பு கைகொடுத்திருக்கிறது. நோய்களை பற்றியும், அதன் அறிகுறிகள் பற்றியும் விலாவாரியாக தேடியிருக்கிறாள். பின்பு தனக்கு ஏற்படும் தலைவலிக்கும், வயிற்றுவலிக்கும் என்ன காரணம் என்று தேடியுள்ளாள். பயத்தோடு அவள் தேடியதால், ‘மூளையில் கட்டியிருந்தாலும் தலைவலி வரும்’ என்பதும், ‘இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் வயிற்று வலி வரும்’ என்பதும் அவளிடம் பெரும் பயத்தை உருவாக்கி விட்டது. அப்போது ‘ஒருவேளை தானும் தனது தந்தைபோன்று, பாட்டி போன்று திடீரென்று இறந்து போய் விடுவேனோ! அதனால் தனது தாய் தனிமரம் ஆகிவிடுவாரோ?’ என்றும் கலங்கியிருக்கிறாள். அந்த கவலை அவளுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை உருவாக்கி விட்டது. இதே நிலையில் அவள் இருந்து கொண்டிருந்தால் அவளது தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து விடும். அது அவளது கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.
அவளது தாயாரை அழைத்தேன். வந்தார்.
அவரை ஆசுவாசப்படுத்தி உட்காரவைத்து மகளின் ‘நோய்த் தேடுதல்’ பற்றிய விஷயங்களை சொன்னதும், ‘‘இதெல்லாம் எனக்கு தெரியாமல் போய்விட்டதே! உனது இத்தகைய கவலைகளை என்னிடம் சொல்லியிருக்கலாமே?’’ என்று மகளிடம் வாஞ்சையோடு கேட்டார்.
தந்தை மற்றும் பாட்டியின் திடீர் மரணங்கள் அவளுக்குள் ஏற்படுத்திய பய பாதிப்புகளை போக்கும் விதத்தில் தாயார் விளக்கம் அளித்தார். அவளது தந்தைக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்ததையும், அதை தெரிந்தே திருமணம் செய்து கொண்டதையும் சொன்னார். அவளது பாட்டி வயோதிகத்தால் மரணமடைந்ததையும் எடுத்துச் சொன்னார். பின்பு அவளது பயத்தை விலக்கி, மனதில் தன்னம்பிக்கை உருவாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. தாயும்– மகளும் அன்றாடம் எல்லா விஷயங்களையும் பற்றி பேசவேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
டீன்ஏஜ் பெண்கள் உடல் அமைப்பில் பெரியவர்கள் போன்று தோன்றினாலும், மனதளவில் தைரியமானவர்கள்போல் காணப்பட்டாலும் பயம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை பெறுவதற்கு இன்டர்நெட் தகவல்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதையே நம்பி நோய்பயத்தை அதிகரித்துக் கொள்ளக் கூடாது.
–விஜயலட்சுமி பந்தையன்.

Next Story